Breaking News

ஒகேனக்கல் வனப்பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சியதாக இருவர் கைது.


ஒகேனக்கல் வனப்பகுதியில் கள்ளசாராயம் காய்ச்சியதாக இருவரை வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் கைது செய்தனர்.


ஒகேனக்கல் வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து கள்ளசாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் வனக்காப்பாளர் ரவிக்குமார், காளிமுத்து, வனவர் கோபால் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வனக் குழுவினர், ஒகேனக்கல் காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட காவலர்கள் அடங்கிய இரு குழுவினர்களும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். 


அப்போது ஒகேனக்கல் வனச்சரகத்திற்கு உட்பட்ட இருசன்கிணறு பகுதியில் இரண்டு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அரண்மனை பள்ளம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் வடிவேல் (47), மாதப்பன் மகன் காளிமுத்து (44) ஆகிய இருவரையும் கைது செய்து, கள்ளசாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். 


வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து தங்குவது, வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்வது, வனப்பகுதிகளில் சமைப்பது மற்றும் கள்ளசாராயம் காய்ச்சுவது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Copying is disabled on this page!