Breaking News

திண்டிவனம் அருகே பன்றிகளை விரட்ட மின் வேலி அமைத்த நிலையில் அதில் ஒருவர் சிக்கி உயிரிழந்த நிலையில் மின் வேலி அமைத்த 3 பேருக்கு 15 நாள் நீதி மன்ற காவல்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிறுவாடி கிராமத்தில் பத்மநாபன் என்பவரின் மகன் மாதவன் (56) வழக்கம் போல் காலை அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது விவசாய நிலம் அருகே ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட்டுள்ள சவுக்கை பன்றிகள் அட்டகாசம் செய்வதாக அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டபோது உயிரிழந்தது தெரிய வந்தது.தகவல் அறிந்த உடன் பிரம்மதேசம் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனுமதி இல்லாமல் மின்வேலி அமைத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் அய்யனார் (34),எட்டியப்பன் மகன் ராஜகுமாரன் (25), கிருபாகரன் மகன் கோதண்டராமன் (38) மூவர் மீதும் திண்டிவனம் வனத்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூவரும் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் எண் - 2ல் ஆஜர் படுத்தப்பட்டனர் இதைத்தொடர்ந்து மேஜிஸ்ட்ரேட் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் திண்டிவனம் கிளை சிறைச்சாலையில் மூவரும் அடைக்கப்பட்டனர்.

No comments

Copying is disabled on this page!