Breaking News

சீர்காழி பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு .


சீர்காழி பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை  விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியின் பல்வேறு பகுதிகளில் தாட்கோ மூலம் கடன் பெற்ற பயணாளிகளை நேரில் சென்று கடன் பெற்று தொழில் செய்து வருகிறார்களா என தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதிவாணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சீர்காழியில் தாட்கோ மூலம் கடன் பெற்று ஆட்டோ ஓட்டிவரும் இரு பயணாளிகளின் ஆட்டோவை ஆய்வு செய்தார்.புத்தூரில் ஒரு ஏக்கர் பரப்பளவில் மீன் வளர்ப்பு செய்துவரும் பயனாளியின் குளத்தினை ஆய்வு செய்து என்ன வகையான மீன்கள் வளர்த்து வருகிறிர்கள் எத்தனை மாதத்தில் மீன் வளரும் என உரிமையாளரிடம் கேட்டறிந்தார்.அதேபோல் வடகாலில் தாட்கோ உதவியுடன் இயங்கி வரும் இரத்தபரிசோசனை நிலையத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக திருவெண்காட்டில் 50 மாணவிகள் தங்கும் வகையில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி புதிய கட்டடம் ரூ. 1 கோடியே 31 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில்  கட்டுப்பட்டு வரும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.மேலும் காரைமேடு கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 5 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் 1. கோடியே 21 லட்சத்து 42 ஆயிரம் ரூபாயில்  கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், கோட்டாட்சியர் அர்ச்சனா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!