Breaking News

சீர்காழி அருகே அமைச்சர் உதயநிதி வருகை அவசர அவசரமாக சாலையை சீரமைக்கும் நெடுஞ்சாலைதுறை- சீரமைத்த சில மணித்துளிகளில் சேதம் அடைந்த சாலை.


மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையினை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதியம்  நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். 

அதனை அடுத்து அவர் செல்லும் வழி நெடுகிலும் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சாலை மார்க்கமாக மணல்மேட்டிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் சாலை வழியாக செல்ல உள்ளார். 

அதற்காக மணல்மேடு வைத்தீஸ்வரன் கோயில் நெடுஞ்சாலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்று அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலைகளில் சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு சரிசெய்யாத நிலையில் இருந்தது. தற்போது உதயநிதி ஸ்டாலின் வருகையால்  அவசரகதியில் நெடுஞ்சாலை துறையினர் அதனை சிலமணிநேரங்களுக்கு முன் அவசர அவசரமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முறையாக தடுப்புகள் வைத்து பணிகள் மேற்கொள்ளப்படாததால், சாலை அமைத்த உடனே அதன் மீது பொதுமக்களின் வாகனங்கள் சென்று சாலை சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாகிறது என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.

No comments

Copying is disabled on this page!