பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் எஸ்சி எஸ்டி மக்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்க வேண்டும். மாவட்ட பட்டியலின சிறப்பு கூறு திட்ட துணை நிதி கண்காணிப்பு குழுவில் தலித் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை நியமிக்க வேண்டும் கோவில்பத்து அரசு மாணவர் விடுதி பயன்பாட்டிற்கு ஏற்றதா இல்லையா என்பதை நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் மாணவர்களின் கல்வி நலன் காத்திட ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாலை நேர சிறப்பு வகுப்புகளை அரசு நடத்தின வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட எஸ்சி எஸ்டி மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநில அரசுக்கு கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments