திருப்பட்டினத்தில் வரவுள்ள ரெஸ்ட்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து 300கும் மேற்பட்டோர் கண்டன பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் மலையான் தெரு பகுதியில் புதிதாக தங்கும் வசதியுடன் கூடிய ரெஸ்டோ பாருக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து. மாநில அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் அருகே தொடங்கிய இப்பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதி என்பதாலும், பேருந்து நிறுத்தம் அருகில் இருப்பதாலும் 100 மீட்டருக்கு உள்ளாக கோயில் இருப்பதாலும் இப்பகுதியில் தங்கும் விடுதியுடன் கூடிய மதுபான கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments