Breaking News

மரக்காணம் அருகே 30 ஆண்டுகளுக்குப் பிறகு 10 ஏக்கர் பரப்பளவிலான ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் புது ஏரி அமைந்துள்ளது, இந்த ஏரியில் கடந்த 30 வருடங்களாக அதே கிராமத்தை சேர்ந்த 21 நபர்கள் 10 ஏக்கர் பரப்பளவிலான ஏரி பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர், இதனை அகற்ற வேண்டும் என பல்வேறு மனுக்கள் வர பெற்றதையடுத்து மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் இன்று கனரக எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின் போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் பாபு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,  மேலும் கந்தாடு ஏரியை முழுமையாக பராமரிப்பு செய்து பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

No comments

Copying is disabled on this page!