அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்தார் மேலும் மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்தார் மேலும் மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பெண்களுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உடன் இருந்தனர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அவ்வப்பொழுது பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து மாணவ மாணவிகளின் கற்றல் திறனை சோதிப்பதோடு அறிவுரைகள் வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments