மீஞ்சூர் ஒன்றியம் வெள்ளி வாயல் சாவடி ஊராட்சியில் ஹிந்துஜா நிறுவனம் சார்பில் 25லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
வெள்ளிவாயல்சாவடி பகுதியில் உள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையின் பேரில் ஹிந்துஜா நிறுவனம் சார்பில் ரூபாய் 25லட்சம் மதிப்பீட்டில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. மக்களுக்கு சுவையான குடிநீர் வழங்கிடும் வகையில் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஹிந்துஜா நிறுவனத்தின் சார்பில் நிறுவப்பட்டது.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வெள்ளி வாயல் சாவடி ஊராட்சிமன்ற தலைவர் பி. உமையாள் பொன்னுசாமி ஹிந்துஜா நிறுவன செயல் அலுவலர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பொன் பாஸ்கர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மாரியம்மாள் டேனியேல், ரீட்டா ராஜேந்திரன், மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உவர்ப்பு நீரை அருந்தி வந்த நிலையில் சுவையான பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகிடும் வகையில் 25லட்ச ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கிய ஹிந்துஜா நிறுவனத்திற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
No comments