செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை கைது செய்த போலிசார் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை கைது செய்த போலிசார் முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர்
புதுச்சேரியில் கடந்த மாதம் கோரிமேடு, ரெட்டியார்பாளையம், லாஸ்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைதன்யா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இசிஆர் சாலை லதா ஸ்டீல் அருகே கோரிமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆந்திராவை சேர்ந்த சந்தோஷ் குமார் பாபு (36) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் அவரது கூட்டாளி சையது பாஷாவுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து சுரேஷ் பாபுவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாக உள்ள சையது பாஷாவை தேடி வருகின்றனர்.இவர்கள் மீது கர்நாடகா, ஆந்திரா, மற்றும் ஹைதராபாத் ஆகிய காவல் நிலையங்களில் 30 க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments