புதுச்சேரியில் நடைபெற்ற உலக ரேபிஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற உலக ரேபிஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நகரத்தின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று ரேபிஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
புதுச்சேரி பிராணிகள் நலன் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் மாபெரும் உலக ரேபிஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பேரணி புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் அருகே நடைபெற்றது.
டாக்டர். ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சபாநாயகர் செல்வம் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் ஸ்ரீ லட்சுமி நாராயணா நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அவர்கள் ரேபிஸ் நோயால் மனிதர்களுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றியும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
பேரணியானது கடற்கரை சாலையில் இறந்த புறப்பட்டு நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கடற்கரையை வந்து அடைந்தது.
No comments