Breaking News

மயிலாடுதுறை மாவட்டத்தில் பனை விதை நடும் பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்

 


மயிலாடுதுறை மாவட்டத்தில் பனை விதை நடும் பணியினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.


காவிரிக்கரையில் மற்றும் நீர்நிலைகளின் கரையோரங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட சத்யா நகரில் (காவிரி ஆற்றங்கரை) பகுதியில் தொடங்கி வைத்தார்.

  

  தமிழ்நாட்டின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய பராமரிப்பில்லாமல் காலத்துக்கும் பயன்தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை,கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு,தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட காவரி ஆற்றங்கரை கரையோர பகுதியில் தொடங்கப்பட்டது.


பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும்,பனை நடுவதை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.நுங்கு,பதநீர்,பனைமட்டை நார்,ஓலை,வெல்லம்,கருப்பட்டி, பனங்கற்கண்டு எனப் பனையின் பயன்கள் மிக அதிகம்.

  

 அதனடிப்படையில் தமிழ்நாடு முழுக்க பனை விதைகள் சேகரிக்கப்பட்டு 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி,சேலம்,ஈரோடு. நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருப்பக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்றுள்ளது.

  

 இப்பணியானது மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வட்டாரத்திற்குட்பட்ட 19 இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் கலந்து கொண்டு பனைவிதைகளை நடவு செய்தனர்.

 

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் ,மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, குத்தாலம் பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன், துணை தலைவர் சம்சுதின், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளார் தமிழ்ஒளி, பேரூராட்சி உறுப்பினர் சுகன்யா, பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், வட்டாட்சியர் சத்யபாமா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஷோபனா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!