Breaking News

அகில இந்திய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏவிசி மாணவர் சாதனை.


டெல்லியில்  அகில இந்திய அளவில் நடைபெற்ற என்சிசி மாணவர்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏவிசி கல்லூரி  மாணவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் எஸ் . கிரிதரன்  இவர் மதுரை என்சிசி ட்ரைனிங் அகாடமியில்  சிறப்பு பயிற்சி பெற்று மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். தொடர்ந்து புதுடெல்லியில் கடந்த 2ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் உள்ள  17 இயக்குனரகங்களை சேர்ந்த என்சிசி மாணவர்கள் கலந்து கொள்ளும் அகில இந்திய அளவிலான துப்பாக்கிச் சூடுதல் பயிற்சி முகாமில் பங்கேற்று. 
அகில இந்திய  அளவிலான துப்பாக்கி சூடுதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவன் செ. கிரிதரனை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான கே. வெங்கட்ராமன்,  முதல்வர் ஆர். நாகராஜன் மற்றும் என்.சி.சி அதிகாரி கேப்டன். டாக்டர். சி. பாலாஜி, பேராசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பலர்  பாராட்டினர்.

No comments

Copying is disabled on this page!