திருக்களாச்சேரியில் பொது மருத்துவம் இரத்ததான முகாம் பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்று தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்களாச்சேரியில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளியில் ஆயப்பாடி சமூக நல அறக்கட்டளை மற்றும் காரைக்கால் விநாயகா மெஷின் மருத்துவக் கல்லூரி இணைந்து மூன்றாம் ஆண்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
சமூக ஆர்வலர் டாக்டர் பாரிஸ் மாசா அலி தலைமையில் நடைபெற்ற முகாமில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பொது மருத்துவம் மற்றும் ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார் முன்னதாக சமூக நல செயல்பாட்டாளர் ஆயப்பாடி முஜிபுர் ரகுமான் வரவேற்றார் முகாமில் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ரத்த தானம் செய்தனர்.
மேலும் சர்க்கரை நோய், எலும்பு முறிவு, குழந்தைகள் நலம், கண் பரிசோதனை, தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான பரிசோதனை உள்ளிட்ட பொது மருத்துவம் நடைபெற்றது பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No comments