கர்ப்பிணிப் பெண், வலியால் துடித்த நிலையில் கலெக்டருக்கு போன் அடித்த கணவர், உடனடியாக மருத்துவமனைக்கு வந்து தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், வலியால் துடித்த நிலையில் கலெக்டருக்கு போன் அடித்த கணவர், உடனடியாக மருத்துவமனைக்கு வந்து தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமேர் சிங் மீனா ரயில்வே தொழிலாளியான இவரது மனைவி மணிஷா மீனா மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில் நெஞ்சுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக மணிஷா மீனா அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டில் சேர்க்கப்பட்டார்.
கர்ப்பிணிப் பெண் என்பதால் அவருக்கு குறைந்த அளவிலான வலி நிவாரணி மாத்திரைகள் மருந்துகள் செலுத்தப்பட்டன. வலி நிற்காமல் அவர் துடித்த நிலையில், மனிஷா மீனாவின் மைத்துனர் ராம் கிருபால் மீனா என்பவர் மாவட்ட ஆட்சியரின் தொலைபேசிக்கு நேரடியாக போன் செய்து தகவலை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தில்குமார் உடன் பிரசவ வார்டில் பார்வையிட்டு சிகிச்சை விபரம் குறித்து கேட்டறிந்தார்.
தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், மனிஷா மீனாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பொதுமக்களின் தொலைபேசிக்கு மதிப்பளித்து மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
No comments