ஒசூர் அருகே வாலிபர் முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், நான்கு இளைஞர்கள் ஒசூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கொளதாசபுரம் என்னும் கிராமத்திற்கு அருகே அடையாளம் தெரியாத வாலிபர் முகம் சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார், உடலை மீட்ட பாகலூர் போலிசார் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையில் உயிரிழந்த கிடந்த வாலிபர் கர்நாடகா மாநிலம், சர்ஜாபுரம் அடுத்த சூலிகுண்டா பகுதியை சேர்ந்த ரேவந்த் குமார்(23) என்பவர் தெரியவந்ததை தொடர்ந்து முன்விரோதத்தால் கொலை நடந்திருக்கலாம் என தீவிர நடந்து வந்தநிலையில் ரேவந்த்குமாரை கடத்தி கொலை செய்ததாக உயிரிழந்தவரின் அதே ஊரை சேர்ந்த நவீன்(24), சிவக்குமார்(28), புனித்(27), பிரவீன்குமார்(26) ஆகிய 4 பேர் எங்களை ரேவந்த்குமார் மிரட்டி வந்ததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ஒசூர் நீதிமன்றத்தில் சரணடைந்தநிலையில், 4பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
No comments