பாரூரில் இலவச இருதய பரிசோதனை முகாம் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, போச்சம்பள்ளி ஒன்றியம், பாரூரில் அருள்மிகு பட்டாளம்மன் மண்டபம் நடைப்பெற்ற விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக, பிறந்த குழந்தைகள் முதல் 25 வயது உள்ளவர்களுக்கு இலவச மாபெரும் இருதய சிறப்பு மருத்துவ முகாமினை பர்கூர் சட்டமன்ற உறுப்பிர் தே.மதியழகன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இதில் திமுவைசேர்ந்த போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட அவை தலைவர் நாகராஜன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சண்முகம், பாண்டியன், சிவா, மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர், வாக்கு சாவடி முகவர்கள், தோழர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டனர்.
No comments