Breaking News

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் பனை விதைகளை நட்டு ஏரிக்கரைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு அரசின் சுற்ச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக நீர்நிலை ஓரங்களிலும், ஏரிகோடிகளிலும் பனை விதைகளை நடும் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் கட்டிகானப்பள்ளி ஏரிகரை ஓரங்களில் பனை விதைகளை நட்டனர். 

முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவி தேன்மொழி ஒரே மாணவி 65 பனை விதைகளை சேகரித்து கொண்டு வந்து கல்லூரி முதல்வர். முனைவர். சௌ.கீதா அவர்களிடம் வழங்கினார். கல்லூரி முதல்வர் தலைமையில் 100 நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் கட்டிகானப்பள்ளி ஏரி கரையின்  ஓரங்களில் பனை விதைகளை நட்டனர். கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் காயத்ரிகோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த நிகழ்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர். வள்ளிசித்ரா மற்றும் முனைவர் சாந்தி ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் தூய்மையே சேவை 2024 எனும் திட்டத்தின் கீழ் ஏரி கரையோரங்களை கட்டிகானப்பள்ளி ஊராட்சியின் உதவியுடன் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுடன் இணைந்து சுத்தம் செய்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகளை அந்த பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


TND Chandran Krishnagiri, [22-09-2024 13:43]

 

No comments

Copying is disabled on this page!