முதலமைச்சர் கோப்பை கால்பந்துப்போட்டி வித்யாகிரி கல்லூரி இரண்டாமிடம் பிடித்து சாதனை.
முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா புதுவயலில் அமைந்துள்ள வித்யா கிரி கல்லூரி அணி வெற்றி பெற்று இரண்டாம் பரிசான ரூபாய் 36 ஆயிரத்தை தட்டி சென்றது.
முதலமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சிவகங்கையில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கால்பந்து போட்டியில் 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் புதுவயல் வித்யாகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி இரண்டாம் இடம் பெற்று பரிசு கோப்பை மற்றும் 36000 ரூபாய் பரிசினை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணன் தாளாளர் டாக்டர் சுவாமிநாதன் பொருளாளர் முகமது மீரா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
No comments