மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் 3 வயது குழந்தையை தவறவிட்டு தாய் கதறல்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மேடையில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் புறப்பட்ட பிறகு கூட்டத்திற்கு வந்த அனைவரும் கலைந்து சென்றனர்.
அப்போது கூட்டத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது 3 வயது மகனை காணவில்லை என கூறி கதறி அழுதார். உடனடியாக மேடையில் அமைக்கப்பட்டுள்ள மைக்கில் கூட்டத்திற்கு வந்த ஒரு பெண்மணியின் குழந்தை காணவில்லை என கூறி குழந்தையின் அங்கு அடையாளங்களை தெரிவித்தனர்.
நீண்ட நேரம் குழந்தையை தேடிவந்த நிலையில் கூட்ட நெரிசலில் தொலைந்த அழுது கொண்டு நின்ற குழந்தையை கட்சி தொண்டர் ஒருவர் தூக்கி வந்து கதறி அழுத தாயிடம் ஒப்படைத்தார். குழந்தையை தூக்கிக் கொண்டு கட்டி அனைத்தவாறு அந்த பெண் வீட்டிற்கு சென்றார்.
No comments