பாரதியார் பல்கலைக் கூட மாணவர்களின் ஓவிய கண்காட்சியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து மாணவர்களை பாராட்டினார்
புதுச்சேரி அரசின் ஓவிய கலைக்கூடத்தில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக் கூட மாணவர்களின் ஓவிய கண்காட்சியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்து மாணவர்களை பாராட்டினார்.
புதுவை முத்தமிழ் சங்கம் மற்றும் பன்னாட்டு கலாச்சார உறவுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான கவுன்சிலுடன் இணைந்து புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் ஓவியக் கண்காட்சியை புதுச்சேரி அரசின் காட்சிக் கூடத்தில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 10 வரை ஏற்பாடு செய்துள்ளது.இதில் 30க்கும் மேற்பட்ட பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் ஓவியங்கள் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சியை சட்டப்பேரவை தலைவர் செல்வம் துவக்கி வைத்து மாணவர்களை முதல் முயற்சியை வெகுவாக பாராட்டினார். புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் துவக்க உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்க கூட ஓவியத்துறை தலைவர் பிரபாகரன், ஓவிய ஆசிரியர் சுகுமாரன், ஓவியர்கள் ஆனந்தன்,சரவணன் மற்றும் மாணவ மாணவிகள் திரளான கலந்து கொண்டனர்.
No comments