காரைக்காலில் புதிய தார் சாலையை பார்வையிட்டார் அமைச்சர் திருமுருகன்
காரைக்காலில் புதிய தார் சாலையை பார்வையிட்டார் அமைச்சர் திருமுருகன்
காரைக்கால் மாவட்டம் காமராஜ் சாலை விரிவாக்கத்தில் புதியதாக போடப்பட்டுள்ள தார் சாலை தரமாக போடப்பட்டுள்ளதா என்பதை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் P.R.N.திருமுருகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் புதிய தார் சாலை அமைத்து தந்ததற்காக நன்றி தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து காமராஜ் சாலை விரிவாக்க பகுதியில் அமைந்துள்ள ஆரிப் நகர், அருண் சங்கர் நகர், சாரா நகர், அப்துல் ராஜக் நகர் ஆகிய பகுதி மக்கள் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு, மேலும் மின்விளக்குகள் அமைத்துத் தருமாறு பகுதி மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அமைச்சர் உடனே துறை அதிகாரிகளிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பின் அனைத்து கோரிக்கைகளையும் சரி செய்து தருவதாக உறுதியளித்தார்கள்.
No comments