புதுச்சேரி கடற்கரை சாலை சிறு வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் பெரியக்கடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி கடற்கரை சாலை சிறு வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் பெரியக்கடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி கடற்கரை சாலை நேரு சிலை அருகே உள்ள நகராட்சி அங்காடியில் 40கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.இங்கு அரசியல் சார்ந்த 2 சங்கங்கள் செயல்பட்டு வருவதால் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் சகோதரர்களான அருண், சதீஸ் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்காடியில் உள்ள பெண் உட்பட இருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், தொடர்ந்து அவர்களுக்கு மிரட்டல் விடுத்து வரும் அருண்,சதீஷ் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி பெரும்பாலன வியாபாரிகள் பெரியக்கடை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மனித உரிமைகள் அமைப்பு தலைவர் முருகானந்தம் போராட்டத்தை பங்கேற்று போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தது தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வியாபாரிகள், அருண்,சதீஷ் ஆகிய இருவரும் மாமுல் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும், திருட்டு தனமாக மின்சாரம் எடுப்பதாகவும்,வெளி ஆட்களுடன் அங்கேயே மது அருந்திவிட்டு பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும், தட்டிக்கேட்டால் அடிப்பதாகவும், புகார் அளித்தால் போலிசார் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர்
No comments