தூத்துக்குடி முள்ளக்காட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உப்பளத் தொழிலாளர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்.
தூத்துக்குடி முள்ளக்காட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உப்பளத் தொழிலாளர்கள் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 வகையான நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதிற்கும் மேற்பட்ட 60 வயதிற்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்தால் அவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில், உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கு தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் சிறப்பு பதிவு முகாம் முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்டதொழிலாளர் உதவி ஆணையர் (பொ) மின்னல்கொடி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
முகாமில், 80 உப்பளத் தொழிலாளர்கள் பங்கேற்று தங்களை பதிவு செய்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊழியர்கள் ராமசந்திரன், நவீன், மாரிராஜ், இந்திரா ஆகியோர் செய்திருந்தனர்.
No comments