தூத்துக்குடியில் நிலத்தை அளந்து கொடுக்க காலதாமதம் செய்த தாசில்தாருக்கு அபராதம்.
தூத்துக்குடியில் நிலத்தை அளந்து கொடுக்க காலதாமதம் செய்த தாசில்தாருக்கு அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.
தூத்துக்குடி, மில்லர்புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், மீளவிட்டானில் உள்ள தனது நிலத்தை அளந்து எல்கை குறித்து தர வேண்டி தூத்துக்குடி தாசில்தாரிடம் மனு அளித்துள்ளார். இதற்காக அவர் ரூ.4 ஆயிரம் கட்டணமாக செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணியன் நிலத்தை அளந்து காட்ட தாசில்தார் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், வழக்கறிஞர் மூலம் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சம்பந்தப்பட்ட தாசில்தாரின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ. 10 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டனர். மேலும் உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
No comments