2026 சட்டமன்ற தேர்தலில் மாணவரணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என புதிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகர திமுக மாணவரணி நிர்வாகிகளை தலைமை கழகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி மாநகர மாணவரணி அமைப்பாளராக வினோத் கண்ணன் மற்றும் துணை அமைப்பாளர்களாக கந்தசாமி, கார்த்திகேயன், அர்ஜுன், சத்யா ஈஸ்வரி, பாலமுருகன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட மாணவர் அணி நிர்வாகிகள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், கடந்த காலங்களில் தமிழ் மொழிக்காக திமுக செய்த தியாகங்கள் மிகப்பெரியது, அவ்வாறு ஆற்றிய பணிகளையெல்லாம் தற்போதைய மாணவரணியினர் தெரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும்.
அதுமட்டுமல்லாது ஆரம்ப காலத்தில் இருந்து திமுக செய்த தியாகங்களையும், சாதனைகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 200 தொகுதியை இலக்காக நிர்ணயித்து செயலாற்றி வருகிறார்.
அதனையும் நாம் உள்வாங்கி, அதற்கும் மேலான வெற்றிபெற உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாணவர் அணியினர் களப்பணியாற்ற வேண்டும் என்றார்.
No comments