ஏரல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
ஏரல் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். மாணவ மாணவிகளுக்கு சத்துணவை கூடுதல் சுவையுடன் வழங்க உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நட்டாத்தி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கொம்புகாரன்பொட்டலில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பெரிதும் சேதம் அடைந்த ஏரல் ஆற்று பாலம் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார்.
பின்னர், புதிதாக போடப்பட்ட குரங்கணியில் புறவழிச் சாலையின் தரத்தை அறிய சாலையில் பள்ளம் தோண்டி எவ்வளவு உயரத்தில் போடப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் சத்துணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, சத்துணவு சமைக்க பயன்படும் அரிசி கணக்கில் உள்ள இருப்பை விட கூடுதலாக இருந்தது. அதை முன் இருப்பு என்று கணக்கில் வரவு வைப்பதுடன் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் சத்துணவு இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் தென்திருப்பேரையில் கட்டப்பட்ட வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்தையும், 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார ஆய்வக கூட கட்டிடத்தையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments