கீழநாலுமூலை கிணற்றில் உள்ள மெய்கண்ட மூர்த்தி சாஸ்தா கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா.
திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலை கிணறு கிராமத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உடன் இணைந்த அருள்மிகு பூரணபுஷ்கலா தேவி சமேத குன்றுமேலய்யன் என்ற மெய்கண்ட மூர்த்தி சாஸ்தா கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் 48 நாள் மண்டலபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது. இதை நிறைவு விழா நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை விநாயகர் பூஜை கோமாதா பூஜை கணபதி ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 11:00 மணி முதல் மதியம் 11:30 மணி வரை மூலஸ்தான சாஸ்தா விற்கு உருத்திர ஏகதாச பாராயணம் ஹோமம் தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 5 மணி முதல் விநாயகர் முதல் சாஸ்தா மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் திரவிய அபிஷேகம், கலச பூஜை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 108 செம்பு மற்றும் 368 சங்கு வைத்து யாக பூஜை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை வியாழக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து 1 மணிக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது. திருக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments