கோபாலசமுத்திரம் ஆனைக்காரசத்திரம் ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் ஆணைக்கரான்சத்திரம் ஆகிய ஊராட்சிகளை கொள்ளிடம் பேரூராட்சியாக அறிவித்த தமிழக அரசு கண்டித்து கோபாலசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சாமியம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றுவதன் மூலம் ஊராட்சி மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் வீடு கட்ட வேண்டும் என்றால் கூட அதிக வரி செலுத்த வேண்ய நிலை ஏற்படும் எனவும், பேரூராட்சியாக மாற்றப்பட்டால் மத்திய அரசால் வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் எனவும், கழிப்பறை வசதிகள் இல்லாத எங்கள் ஊராட்சியை பேரூராட்சி யார மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளிடம் காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுட்டுள்ளனர்.
No comments