Breaking News

ரூ.1 கோடியே 5 இலட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு..

 


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சி மேலகிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பயனாளி வீடு கட்டி வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.64 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் விளநகர்-மேபரசலூர் சாலை அமைக்கப்பட்டு வருவதையும், அதனை தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.9 இலட்சத்து ஆயிரம் மதிப்பீட்டில் விளநகர்பெரியக்குளம் வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவதையும், பின்னர், பரசலூர் கிராமத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், முக்கரும்பூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.16 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சாலை, குடிநீர், மின்சார வசதி உள்ளிட்டவைகளுக்கு அதி கவனம் செலுத்தி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 2500 பயனாளிகளுக்கு குடியிருப்பு வீடு கட்டப்பட்டு வருகிறது. மேலும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 28 பணிகள் முடிவுற்றுள்ளது. பிரதமரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மடப்புரம் சாலை, போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் செம்பனார்கோவில் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தரமானதாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

பரசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் தெரிவித்ததாவது:

நான் பரசலூர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த பல ஆண்டுகளாக எங்களது கிராமத்தில் சாலை சீரமைக்கப்படாமல் பழுதாக இருந்தது. எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்கள் கிராமத்தில் சாலை சீரமைக்க வேண்டி பலமுறை நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருந்தோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றபின், தற்பொழுது, எங்கள் கிராமத்திற்கு அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாங்கள் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளை செய்து வருகிறோம். எங்கள் பணிகளுக்கு இந்த தார்சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், எங்கள் சிரமமின்றி சென்று வர வசதியாக உள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எங்கள் கிராமத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .மீனா, மஞ்சுளா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!