Breaking News

சதுரங்க வேட்டை பட பாணியில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து மக்களிடம் கோடி கணக்கில் மோசடி..

 


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்றவர் இவரது மகன் பிரபு தந்தை மகன் இவர்கள் இருவரும் குடியாத்தம் நேதாஜி சவுக் அருகில் அரிசி கடை ஆரம்பித்து அதில் மாதந்தோறும் 1100 ரூபாய் செலுத்தினால் 12 மாதங்கள் பிறகு பொன்னி அரிசி 7 சிப்பம் கோல்ட் வின்னர் oil 15 லிட்டர் பிரியாணி அரிசி 5 கிலோ துவரம் பருப்பு எட்டு கிலோ உளுத்தம் பருப்பு 8 கிலோ இதுபோன்று வண்ணமயமான விளம்பரங்களை பொதுமக்களிடம் கொடுத்து பணம் வசூல் வேட்டை நடத்தியுள்ளார் மேலும் பொங்கலுக்கு பரிசு திட்டம் என ஆரம்பித்து பொருட்களை கொடுக்காமல் பொதுமக்களை தினமும் அலைக்கழித்துள்ளார்.

 மேலும் இவரிடம் பழகியவர்கள் சொந்தக்காரர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் 50 லட்சம் மோசடி 30 லட்சம் மோசடி 17 லட்சம் மோசடி என இவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தற்போது புலம்பிக் கொண்டிருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது 

 எனவே வரதராஜன் மற்றும் இவரது மகன் பிரபு இவர்களிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் குடியாத்தம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தனர்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!