Breaking News

புஷ்பா படம் பாணியில் புதுச்சேரியில் இருந்து கோயம்புத்தூருக்கு மினி லாரியில் தனி அறை அமைத்து அதில் கடத்திச் செல்லப்பட்ட 50 பெட்டிகள்..

 


புதுச்சேரியில் இருந்து மினி லாரியில் மது பாட்டில்கள் கடத்திச் செல்வதாக விழுப்புரம் சரக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் இனாயத்பாஷா மற்றும் தனிப்படை போலீசார் உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை இட்ட பொழுது லாரியில் எந்தவிதமான சரக்கும் இல்லை ஆனால் மினி லாரியின் மேல் தார் போடப்பட்டு மூடப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியை முழுமையாக ஆய்வு செய்தனர் அப்போது மினி லாரியில் முன் பகுதியில் புஷ்பா படப்பாணியில் தனி அரை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது இதையடுத்து லாரி ஓட்டுனர் பாண்டிச்சேரி லாஸ்பேட்டியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் விசாரித்த பொழுது அவர் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் ஏழுமலையிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் மினி லாரியில் புஷ்பா பட பாணியில் அமைக்கப்பட்டு இருந்த தனி அறையை உடைத்துப் பார்வையிட்ட பொழுது அதில் மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினி லாரியின் தனி அறையில் 50 பெட்டிகளில் இருந்த 2400 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து லாரி ஓட்டுனர் புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 36 ஆயிரம்.

மினி லாரியின் மதிப்பு ரூபாய் 7 லட்சம்.

No comments

Copying is disabled on this page!