Breaking News

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை பல்வேறு பாதிப்புகள்..

 


தரங்கம்பாடி அருகே கனமழையின் காரணமாக அனந்தமங்கலம் ஓடக்கரை தெருவில் 35 ஆண்டுகள் பழமையான மாடி வீடு இடிந்து விழுந்து சேதம் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த உரிமையாளர்கள் உயிர் தப்பிய நிலையில் 4 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது குறிப்பாக தரங்கம்பாடி தாலுகாவில் விட்டுவிட்டு கனமழையானது கொட்டி தீர்த்து வருகிறது இடைவிடாத பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது தரங்கம்பாடி தாலுக்கா காழியப்பன்நல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் ஓடக்கரை தெருவை சார்ந்தரத்தினகுமார் என்பவருக்கு சொந்தமான சுமார் 35 ஆண்டு பழமையான மாடி வீடு மழையின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது வீட்டின் உரிமையாளர் ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவி மூன்று குழந்தைகள் வீட்டின் பின்புறம் உறங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

இடிந்து விழுந்த வீட்டில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் இடிபாடில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் தரங்கம்பாடி தாலுகாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

No comments

Copying is disabled on this page!