வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் கன மழை..
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள திருநாவலூர் ஆசனூர் களமருதூர் சேந்தநாடு உட்பட நூறுக்கு மேற்பட்ட கிராமங்களில் இன்று மதியம் தொடங்கிய மழை தற்பொழுது தீவிரம் அடைந்துள்ளது உளுந்தூர்பேட்டையில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது கனமழை காரணமாக சாலையோர வியாபாரிகள் மழையில் நனைந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சென்னை திருச்சி பிரதான சாலையில் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கிறது.
No comments