யூனியன் நிறைவு கூட்டத்தில் ஒன்றியக்குழுத்தலைவர் கண்ணீர் மல்க விடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்..
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண நிறைவு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் கமலஜோதிதேவேந்திரன் தலைமை வகித்தார்.
ஒன்றிய குழு தலைவர் கடந்த ஐந்து ஆண்டு காலம் அனைத்து கவுன்சிலர்களுக்கும் கட்சி பாகுபாடு இன்றி தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழாக்களில் தாய் வீட்டு வரிசை சீதனம் போல் பொருள்களை வழங்கி வந்தார். தற்பொழுது பதவி காலம் முடிவது வருத்தமாக உள்ளது என்றார்.
இதேபோல் அதிமுக, திமுக, சுயேச்சை என பல்வேறு உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு காலம் நிறைவு குறித்து பேசினர்.இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு
தலைவர் கலலஜோதிதேவேந்திரன் பேசுகையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதன் அடிப்படையில் நான் ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து கவுன்சிலர்களுக்கும் என்னால் முடிந்தவரை பாகுபாடு இன்றி வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தேன். எனக்கு ஐந்தாண்டு காலம் முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க விடை பெற்றது நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.
No comments