நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளினை முன்னிட்டு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி சிறப்பு பூஜைகள்,அன்னதானம்..!!
நடிகர் ரஜினிகாந்தின் 74 ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது .இதனை முன்னிட்டு ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகர ரஜினி நற்பணி மன்றம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி பால் , பன்னீர் , சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் சுவாமிக்கு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து ரஜினி பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ரஜினி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments