Breaking News

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா திடீர் ஆய்வு: நோயாளிகளை அலைக்கழிப்பு செய்யாமல் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்..

 


புதுச்சேரி நகரத்திற்கு அடுத்த பெருநகரமாக விளங்கும் வில்லியனூர் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் மருத்துவ சேவைக்காக வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு இரவு நேரங்களில் மருத்துவர்கள் சரியாக பணியில் இல்லாமல் நோயாளிகளை அலைகழிப்பு செய்வதாகவும், சிலருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்புவதாகவும், உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு இல்லை, எக்ஸ்ரே - ஈசிஜி வசதி இல்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்தது. இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், அரசு தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.


இந்நிலையில் இன்று காலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா  திடீரென வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு முறையாக சீட்டு பதியப்பட்டு வைத்தியம் பார்க்கப்படுகிறதா? நோயாளிகளின் தகவல்களை உரிய முறையில் சேகரித்து வைக்கப்படுகிறதா? நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருத்துவர்கள் பணியில் உள்ளனரா? மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு அதிகாரி பாமகள் கவிதையிடம், நோயாளிகளை அலைக்கழிப்பு செய்யாமல் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், உயிர் காக்கும் மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும், எக்ஸ்ரே மற்றும் ஈ.சி.ஜி எடுப்பதற்கு நோயாளிகளை வெளியே அனுப்பாமல் இங்கேய எடுக்க வேண்டும், மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

No comments

Copying is disabled on this page!