ஆன்லைன் மூலம் 20க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்..
கஸ்டம்ஸில் பிடிபடுகின்ற பொருட்களை குறைந்த விலைக்கு கொடுக்கிறேன் என்று வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஆன்லைன் மூலமாக செல்போன்,டிவி,பிரிட்ஜ் வாஷிங் மெஷின் படங்களை அனுப்பி மற்றும் வெளிநாட்டில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன் என்று கோட்டகுப்பத்தை சேர்ந்த அப்துல் சாதிக் என்பவர் மோசடி செய்ததாக இருபதுக்கும் மேற்பட்டோர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தியாகராஜன்,கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஆன்லைன் மூலமாக 20க்கும் மேற்பட்டோரிடம் அப்துல் ஷாகித் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவான அப்துல் ஷாகித்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments