சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை..
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 8000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி 13,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சாத்தனூர் மற்றும் வீடூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகம் திறக்கப்படுவதன் காரணமாக வெள்ள அபாயம் ஏற்படுவதால் புதுச்சேரியில் சங்கராபரணி மற்றும் தென் பெண்ணை ஆறு அருகில் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்குமாறு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ஊழியர்கள்.
ஒலி பெருக்கி மூலமாக வீதி வீதியாக சென்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்கு முகாம்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தங்குமாறு கேட்டுக்கொண்டனர் மேலும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்கள்.
No comments