Breaking News

பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட பனையடிக்குப்பம் கிராமத்திற்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்..

 


பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட பனையடிக் குப்பம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக அமைப்பாளர் சிவா எம் எல் ஏ வழகினார்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட படையடிக்குப்பம் கிராமம் பெஞ்சால் புயலால் மிகவும் சேதமடைந்தது. 

புயல் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

அப்பகுதி மக்களை திமுக அமைப்பாளர் சிவா மற்றும் பாகூர் எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மேற்கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பாய் மற்றும் வேட்டி புடவை அடங்கிய தொகுப்பினை புதுவை திமுக அமைப்பாளர் சிவா மற்றும் பாகூர் எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் திமுக தொகுதி செயலாளர் சக்திவேல், திமுக துணை அமைப்பாளர்கள் தேவேந்திரன், திருநாவுக்கரசு, உருளையன்பேட்டை திமுக தொகுதி செயலாளர் சக்திவேல், லாஸ்பேட்டை திமுக தொகுதி செயலாளர் தியாகராஜன் மற்றும் பனையடிக்குப்பம் நிர்வாகிகள் மோகன்ராஜ், குமரவேல், ஸ்ரீதர், பன்னீர்செல்வம், வினோத் குமார், பாலு, குணசேகரன் உட்பட பொறுப்பாளர்கள் , கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!