Breaking News

புதுச்சேரியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்த ஆதி திராவிடர் நலத்துறை செயலர் டாக்டர் முத்தம்மா..


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருளர்,காட்டுநாயக்கன்,மலைக்குறவன்,எர்குலா,குருமன்ஸ் உட்பட சுமார் 4000-கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் டாக்டர் முத்தம்மா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள் குழு புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு அருகே உள்ள பழங்குடியினர் குடியிருப்பு மற்றும் சஞ்சீவி நகர் பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அந்த மக்களின் குறைகளை கேட்டு அறிந்த துறை செயலர் முத்தம்மா, உடனடியாக குடியிருப்பு, மின் வசதி மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

இந்த ஆய்வின்போது வருவாய்த்துறை அதிகாரிகள், ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி பழங்குடியினர் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments

Copying is disabled on this page!