முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா..
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி 100 அடி சாலை-விழுப்புரம் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் க. இலட்சுமி நாராயணன், அமைச்சர்கள் சாய் ஜெ சரவணன் குமார், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம்,சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
No comments