ஏனாமில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் 600கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்..
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் பள்ளி அளவிலான மாணவர்களுக்கு 2 நாட்கள் நடைபெறும் விளையாட்டு போட்டி ஏனாம் பிராந்தியத்தில் உள்ள ஒய். எஸ் .ஆர் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது.
புதுச்சேரி, காரைக்கால்,மாகே ஏனாம் ஆகிய 4 பிராந்தியகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பள்ளி வீரர்-வீராங்கனையினர் பங்கேற்றுள்ளனர்.கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, ஓட்டப் பந்தயம் என அனைத்து விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் நேற்று ஏனாம் வந்த நிலையில், அவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்களுக்கான உணவினை முன்னாள் அமைச்சரும், புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணா ராவ் ஏற்றுள்ளார்.
விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அவர்களுடன் வந்துள்ள ஆசிரியர்கள் ஆகியோருக்கு 3 வேளையும் அறுசுவை உணவு மல்லாடி கிருஷ்ணாராவ் ராவ் நடந்தும் முதியோர் இல்லத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட வருகிறது.
வழக்கமாக வெளியூருக்கு விளையாட்டுக்கு செல்லும் மாணவர்களுக்கு சரியான உணவு கிடைப்பது இல்லை. ஆனால் ஏனாமில் தரமாகவும் சுவையாகவும் உணவு இருப்பதாக மாணவர்கள் பாராட்டினார்கள்.
No comments