புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்..
புதுச்சேரி சீனியர் எஸ்.பி கலைவாணன் உத்தரவின் பேரில் சட்ட விரோதமாக கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை மற்றும் பெரிய கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கள்ள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கண்ணன்,கணேசன்,முகமது ரபீக், ராஜாராம் ஆகிய 4 பேரை போலிசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக சீனியர் எஸ்.பி கலைவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கள்ள ஆற்றல் விற்பனையில் ஈடுபடும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர் என்றும், தலைமறைவான லாட்டரி கும்பலின் தலைவன் சரவணனை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.
No comments