வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாகவும் உள்ளது. நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் அகழ்வைப்பகத்தில் உள்ள புராதன வரலாற்று
சின்னங்கள் மற்றும் பண்டையகால சுவடுகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் உலக மரபு வார விழா கொண்டாடபடுவது வழக்கம். அதன்படி இன்று 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஓரு வாரம் உலக மரபு வார விழா நடைபெறவுள்ளது.இந்த 7 நாட்களும் பொதுமக்கள், மாணவர்கள்,சுற்றுலா பயணிகள் டேனீஷ் கோட்டை மற்றும் தொல்லியல் அகழ்வைப்பகத்தை கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் தொல்லியல், கல்வெட்டியல் குறித்து அறிந்து கொள்வதோடு பாதுகாக்கப்பட்டுவரும் புராதன சின்னங்கள் பண்டைய கால வாழ்கை வரலாறு, நாகரிகம் குறித்தும் அனைவரும் அறிந்துகொள்ள பயனுள்ளதாக உள்ளது.உலக மரபு வார விழாவின் முதல் நாளான இன்று தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை மற்றும் அகழ்வைப்பகத்தை திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.
No comments