ஸ்ரீமுஷ்ணத்தில் 5 கிலோ கஞ்சா வைத்திருந்த மூவரை கைது செய்த காவல் ஆய்வாளர் வீரசேகரன்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று சுமார் 5 மணி அளவில் ஸ்ரீமுஷ்ணம் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் போலீசார் ஸ்ரீமுஷ்ணம் டூ ஆண்டிமடம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த சிவபுசனம் இவரது மகன்பழனிசாமி வயது 44 மற்றும் பெண்ணாடத்தைச் சார்ந்த ஜெயராஜ் மகன் இளையராஜா இருவரும் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ஆண்டிமடம் சென்று கொண்டு இருந்தனர் அப்போது வாகன சோதனை ஈடுபட்ட போலீசார் சந்தேகத்தின் பெயரில் இவரது வாகனத்தை சோதனை செய்தனர் இதில் பின்புறம் அமைந்திருந்த ஜெயராஜ் இடம் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா இறப்பதை கண்டு அதிர்ந்து போன போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் லால்பேட்டை சேர்ந்த சம்சுதீன் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த அக்பர் இருவரிடம் கஞ்சா கொடுத்து விற்பனை செய்தது விசாரணை தெரியவந்தது அவர்களை விசாரித்த பொழுது மொத்தம் ஐந்து கிலோ கஞ்சா கைப்பற்றி விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
No comments