சமையல் செய்வதற்காக சிலிண்டர் பத்தவைத்து போது திடீரென சிலிண்டரின் ஓஸ் பிடுங்கிதால் கேஸ் கசிந்து தீ விபத்து..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் பொம்மி 46 இவர் வழக்கம் போல் மதியம் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பத்த வைத்துள்ளார் அப்பொழுது சிலிண்டரின் ஓஸ் கழன்று கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து எறிந்தது அதிர்ச்சடைந்த பொம்மி என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டை விட்டு வெளிய ஓடி வந்து கூச்சலிட்டனர் பின்னர் தீ வேகமாக பரவி வீட்டிலிருந்த கதவும் தீப்பிடித்து எரிந்து தீ அதிகளவு எரியவே சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் அருகில் இருந்த வீட்டினர் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் நின்றனர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஈரப்பதம் கொண்ட சாக்கு பை வைத்து சாமர்த்தியமாக தீயணைத்தனர் இந்த விபத்தினால் வீடு முழுக்க புகை மண்டலமாக இருந்தது தீயணைப்புத் துறையினர் நவீன இயந்திரத்தை வைத்து புகையை வெளியேற்றினர்.இந்த தீ விபத்தில் சிலிண்டர் கசிவு தீப்பிடித்தவுடன் வீட்டை விட்டு வெளியேறினால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.சமையல் செய்வதற்காக சிலிண்டரை பத்த வைத்த போது திடீரென சிலிண்டரின் ஓஸ் கழன்று தீப்பிடித்து எறிந்த பொழுது சிலிண்டர் வெடித்து விடுமோ என்ற பயத்தில் அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments