புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றாத்த தாழ்வு மண்டலம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மீனவர்கள் எவரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
இதனால் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைத்து திரும்பி விட்டனர். பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பியதால் துறைமுகம் முழுவதும் படகுகள் நிரம்பி உள்ளன.வானிலை எச்சரிக்கை காரணமாக, மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கட்டுமரம், வலை, விசைப்படகு ஆகியவற்றை உரிமையாளர்கள் அவ்வப்போது கண்காணித்து பாதுகாத்து கொள்ளுமாறும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மீன்வளத்துறையின் அவசர கால கட்டுப்பாட்டு அறை 24x7 முழு நேரமும் இயங்கி வருகிறது. எனவே மீனவர்கள் அவசர உதவிக்கு 0413-2353042 என்ற எண்ணிலோஅல்லது அவசர கால செயல் மையத்தின் Toll free No. 1070 மற்றும் 1977 தொடர்புகொள்ளலாம் என்றும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது...
இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மீனவர்களை எச்சரிக்கும் வகையில் புயல் கூண்டு ஒன்று ஏற்றப்பட்டுள்ளது.
No comments