கீ.வ.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 568 பயனாளிகளுக்கு ரூ. 3.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
வேலூர் மாவட்டம் கீ. வ. குப்பம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட 568 பயனாளிகளுக்கு ரூ. 3.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி அவர்களும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் து. மு. கதிர் ஆனந்த் கொண்ட சமுத்திரம் ஆர். ஜி. டி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன்(கீ. வ. குப்பம்) என். இ. சத்யானந்தம் ( குடியாத்தம்) மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர்கள் சீதாராமன் சோபன் பாபு மீனாட்சியம்மாள் தனித்துறை ஆட்சியர் (ச. பா. தி.) கலியமூர்த்தி குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments