Breaking News

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்களும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்து வருகின்றனர்.  

இந்த நிலையில் இன்று வி.கே.சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். அவர்கள் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர். 

கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த சசிகலாவுடன் பக்தர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கைகொடுத்தும் மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளியில் ஆசிரியர்களின் நடவடிக்கைள் குறித்து பள்ளி நிர்வாகம் அறிந்திருக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் தான் ஆசிரியர்களை நியமனம் செய்கிறது. அரசை நம்பி தான் பள்ளிகளுக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்புகிறார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் மட்டும் பலி கூறிவிட்டு அரசு இதுபோல் சம்பவத்தில் நழுவக்கூடாது. இதுபோல் சம்பவம் நடக்காமல் உடற்கல்வி ஆசிரியர்களை அரசாங்கமே பயிற்சி கொடுத்து அனுப்ப வேண்டும். அரசாங்க பள்ளிக்கூடங்களும் அரசு பள்ளிக்கூடங்கள் போல் இல்லாமல் தனித்துவமாக இயங்குகிறது என்று கூறினார்.

- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001 

No comments

Copying is disabled on this page!